வலி. தென்மேற்கு பிரதேச சபையினால் இயற்கை உரம் அறிமுக நிகழ்வு
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையினால் உற்பத்தி செய்யப்பட்ட இயற்கை உரத்தினை அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று (2021.07.28) வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
வலி.தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் அ.ஜெபநேசன் அவர்கள் தலைமை தாங்கிய இந்நிகழ்வில், விருந்தினர்களாக வடக்கு மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி எஸ்.அஞ்சனாதேவி, சண்டிலிப்பாய் பிரதேச செயலர் திருமதி உ.யசோதா,திருமதி மு.சுலோச்சனா, பிரதேச சபையின் உறுப்பினர்கள், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை