வைத்தியசாலையில் ரிஷாட் எம்.பி செய்த காரியம், சிங்கள ஊடகம் தகவல்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது செய்த இரகசிய நடவடிக்கையினை பொலிஸார் கண்டுப்பிடித்துள்ளனர்.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வைத்தியர்கள் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல், அதனை ஒரு தாளில் சுற்றி கழிப்பறையில் வீசியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஒரு தாளில் சுற்றப்பட்ட மருந்துகளை கழிப்பறை ஜன்னல் வழியாக வீசி எறிந்ததோடு, பொலிஸ் அதிகாரிகள் அவற்றை வைத்தியர்களிடம் காட்டி, அவை எம்.பி.க்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குற்றப் புலானாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அண்மையில் சகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எவ்வாறாயினும் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு ரிஷாட் பதியுதீன் விடுத்த கோரிக்கையினை குற்றப் புலானாய்வு பிரிவினர் மறுத்துவிட்டதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பிர் ரிஷாட் பதியுதீன் நேற்றைய தினம் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை