வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி யாழில் ஆர்ப்பாட்டம்!
வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் நீதி வேண்டி அவர்களின் உறவினர்களால் இன்றையதினம் யாழில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் கள அலுவலகத்தின் முன்றலில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த ஆர்ப்பாட்டமானது வடக்கு கிழக்கில் பரவலாக இன்றைய தினம் முன்னெடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை