ஒழுக்க மீறல்களில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை
ஒழுக்க மீறல்களில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் சீ.டி.விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
நெலுவ பொலிஸ் நிலையத்தின் உத்தியோகத்தர் ஒருவர் சிறுமியொருவரை பொலிஸ் நிலையத்தில் துஷ்பிரயோகம் செய்தமை உள்ளிட்ட சில சம்பவங்கள் அண்மையில் பதிவாகியிருந்தன.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்களது கடமைகளை உரிய முறையில் மேற்கொள்ளாத சம்பவங்கள் தொடர்பில் இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
இவ்வாறான ஓர் பின்னணியில் ஒழுக்க மீறல்களில் ஈடுபடும் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் அறிவுறுத்தலுக்கு அமைய பொலிஸ் கடமை தவறும் அதிகாரிகள் உத்தியோகத்தர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல், துஷ்பிரயோகம், களவாடுதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுடன் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்புபட்டிருந்ததாக அண்மைய நாட்களில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை