• Breaking News

    மீண்டும் படிப்படியாக முடக்கப்படும் நாடு!

     கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10 மணி முதல் அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பகுதி முடக்கப்படவுள்ளது.

    கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம் ரக்கீப் தலைமையில் நடைபெற்ற உயர் மட்டக்கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதற்கமைய இன்று இரவு முதல் மருதமுனை பிரதேசத்திற்கு வெளியில் இருந்து பொதுமக்கள் உட்பிரவேசிப்பதும், மருதமுனையில் இருந்து வெளியேறுவதும் முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.


    அத்துடன் சில பகுதிகள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டன்சினன் கிராம சேவகர் பிரிவில் மத்திய பகுதியும், கண்டி மாவட்டத்தில் சுதும்பொல மேற்கு கிராம சேவகர் பிரிவில் வெலமெத பாரகம பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காரை நகர் கிராம சேவகர் பிரிவில் கல்லித்தெரு பகுதியும், கல்வன் தால்வு பகுதியும் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad