• Breaking News

    கேப்பாபிலவில் தமக்கும் காணி இருப்பதாக தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் குதித்த சீனர்!

    தென்னிலங்கையில் வசித்துவருகின்ற சீன நாட்டவர் ஒருவருக்கு குறித்த கோட்டாபய கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49ஏக்கர் காணியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

    இந் நிலையில் குறித்த சீன நாட்டைச்சேர்ந்தவர் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிக்கு வருகைதந்து தனது காணிகளுக்குரிய நட்ட ஈட்டைப் பெறுவதற்கும், இதுவரைகாலம் அங்கு கடற்படை இருந்து தனது காணியைப் பயன்படுத்தியமைக்கான நட்டையீட்டைப் பெறுவதற்கும் கட்டாயம் அங்கு நில அளவீடு இடம்பெறவேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.


    குறித்த நபரின் இத்தகைய கருத்திற்கு அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கடுமையான கண்டனங்களை வெளியிட்டிருந்தனர். குறிப்பாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சீனச்சிங்களவர் அங்கிருந்து வெளியேறவேண்டும் என கோசம் எழுப்பியிருந்தார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad