யாழில் வயோதிபப் பெண்ணிற்கு ஒரே தடவையில் இரண்டு தடுப்பூசிகள்! மக்களின் உயிர்களோடு விளையாடும் உத்தியோகத்தர்கள்!
யாழில் தடுப்பு ஊசி ஏற்றுவதற்காக சென்ற வயோதிபப் பெண்ணிற்கு ஒரே தடவையில் இரண்டு தடுப்பூசிகளும் ஏற்றியதால் அங்கு பரபரப்பான நிலை காணப்பட்டது.
யாழில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கருணா தடுப்பூசி தேடும் பணிகள் இன்று (29) ஆரம்பமாகியுள்ளன.
இந்த நிலையில் யாழ். பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பரியோவான் கல்லூரி நிலையத்தில் அமைந்துள்ள தடுப்பூசி ஏற்றும் நிலையத்திற்கு சென்ற பெண்ணிற்கே இவ்வாறு இரண்டு தடவைகள் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளன.
வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த குறித்த பெண்மணி தடுப்பூசி போடுவதற்கான பதிவுகள் அனைத்தையும் முடித்துவிட்டு தடுப்பூசி போடுவதற்காக சென்றவேளை, அங்கிருந்த தாதி ஒருவர் அவருக்கு ஊசியை ஏற்றும்போது தொலைபேசி அழைப்பு வந்ததால் அவசரமாக ஊசி ஏற்றி விட்டு சென்றுள்ளார். அதனை அறியாத மற்றொரு தாதி அவரது மற்றைய கையிலும் ஊசியை ஏற்றினர்.
கருத்துகள் இல்லை