யாழ்.மீசாலையில் ஆசிரியை வீட்டில் ஆயுதமுனையில் கொள்ளை
யாழ்.சாவகச்சோி – மீசாலை பகுதியில் திடீரென மின்சாரம் தடைப்பட்ட நிலையில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் இடம்பெற்ற சமயம் திடீரென மின்சாரம் தடைப்பட்ட நிலையில், வீட்டின் உரிமையாளராக பெண் ஆசிரியை கதவை திறந்துகொண்டு வீட்டுக்கு வெளியே சாதாரணமாக வந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டு முற்றத்தில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் ஆசிரியையையும் இழுத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்ததுடன் ஆசிரியையின் கணவன் மற்றும் மாமனை கத்தியை காண்பித்து அச்சுறுத்தி வீட்டிலிருந்து தங்க நகைகள் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கருத்துகள் இல்லை