கைதிகளிடம் கையூட்டு பெற்ற சிறைப் பாதுகாவலருக்கு நிகழ்ந்த கதி!
பழைய போகம்பறை சிறைச்சாலைக்குத் தனிமைப் படுத்தலுக்காக வருகை தரும் புதிய கைதிகளிடம் பணம் பெற்ற சிறைச்சாலை பாதுகாவலர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
குறித்த சிறைச்சாலை பாதுகாவலர் சுமார் 9,000 ரூபா பணம் பெற்றுள்ளதாக விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது என சிறைச்சாலை உதவி கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 03 பேரிடம் பணம் பெற்றதாகத் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை