பயணத் தடை தொடர்பில் வெளியான தகவல்
பொதுமக்கள் மரண நிகழ்வு அல்லது திருமண நிகழ்வுகளுக்காக மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
ஆனால், குறித்த தேவைகளுக்காக நெருங்கிய உறவினர்கள் மாத்திரம் பயணிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இதன்போது உரிய ஆவணங்கள் அல்லது இலத்திரனியல் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அதேபோல், இரண்டு மாகாணங்களை சேர்ந்த குடும்பங்களில் திருமண நிகழ்வுகள் இடம்பெறும் பட்சத்தில் அதன்போது, இரு வீட்டார் மாத்திரம் மாகாணங்களுக்கிடையில் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.
அத்துடன், திருமண நிகழ்வுகளில் 150 உறுப்பினர்கள் மாத்திரம் பங்குக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-----------------------------------------------
Tamilus இன் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
கருத்துகள் இல்லை