• Breaking News

    மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நாளை நீக்கம்?

    மாகாணங்களுக்கு இடையில் அமுலில் இருக்கும் பயணக்கட்டுப்பாடுகளை நாளை முதல் நீக்குவற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    கடந்த வெள்ளிக்கிழமை கூடிய கொவிட் தடுப்பு செயலணி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சில நிபந்தனைகளின் அடிப்படையில் இவ்வாறு தடை நீக்கம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு காரணமாக பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக வெளியிடங்களில் உள்ள நோயாளர்கள் மற்றும் ஏனைய அத்தியாவசியத் தேவவைகளுக்கான வெளியிடங்களுக்கு செல்வோரு பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

    இந்நிலையில், குறித்த விடயங்களை கருத்திற்கொண்டு மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை நீக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad