• Breaking News

    மர்மமான முறையில் உயிரிழந்த நபர்- உடல்கூற்று பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட சடலம்!

     புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரவுக்குட்பட்ட விசுவமடு மேற்குப் பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    நேற்றைய தினம் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவக்கமைய இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.

    ஆண் ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னத்தம்பி முத்துகுமார் வயது 39 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    இவர் இறப்பதற்கு முதல் நாள் 22.07.2021 அன்று அதிக மது போதையிலிருந்ததாகவும்  மனைவியை பலமுறை தடியால் தாக்கியுள்ளதாகவும் மனைவி அடிகாயங்களுக்குள்ளான நிலையிலிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    22.07.2021 இரவு படுத்துறங்கிய நிலையில் மறுநாள் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  இவர்கள் வசிப்பிடம் உழவனுர் தம்பிராசபுரம் கிளிநொச்சி மாவட்டம் எனவும்  சடலம் மீட்கப்பட்ட இடம் விசுவமடு மேற்கு முல்லைத்தீவு மாவட்டம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இச்சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இறந்தவரின் தலைப்பகுதியில் ஒரு காயம் ஏற்பட்டு இரத்த கசிவும் காணப்பட்டுள்ளதாகவும் மனைவி தெரிவித்துள்ளார். 

    இந்நிலையில் இறந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது இச்சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad