• Breaking News

    மாணவர்களின் இணையவழி கல்வியில் அரசு  மிகவும் தோல்வியை சந்தித்துள்ளது - இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு

    இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

    இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் தலீசன் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.

    இதன் போது தற்போது நடைமுறையில் உள்ள இணையவழிக்கல்வியை நிறுத்துமாறு அனைத்து ஆசிரியர் தொழிற்சங்கங்களும் அறிவித்துள்ளது. அதற்கமைய இடையவழி கல்வியை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அங்கு அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

    மாணவர்களின் இணையவழி கல்வியில் அரசு மிகவும் தோல்வியை  சந்தித்துள்ளது. இதனடிப்படையிலயே மீண்டும் பாடசாலை ஆரம்பிப்பது  பரீட்சைகளை்நடாத்தி சாதரணமான நிலையில் எல்லாம் உள்ளது என்று கூற அரசு முனைகிறது.

    மலைய மக்களைப் பொறுத்தவரை அவர்களது 1000 ரூபாய் சம்பள விடயம்  பெரும் பிரச்சினையாக உள்ளது. அந்த நிலையில் அந்த மாணவர்களின் இணைய கல்வி சாத்தியமற்ற ஒன்று. இணைய வசதிகள் அற்ற நிலையில் மரம், கூரைகளிலும் மலைகளிலும் ஏறி இணைய வசதியை பெற வேண்டிய துர்ப்காக்கிய நிலைக்கு தள்ளப்பட்பட்டுள்ளனர்-என்றனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad