இலங்கையில் ஒவ்வொரு குடும்பமும் ஆறு லட்சம் ரூபா கடனாளியாக மாறியுள்ளது!
இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டு 15 மாதங்கள் கடந்த நிலையில் நான்கு பேரைக் கொண்ட குடும்பம் ஒன்று ஆறு லட்சம் ரூபா கடனாளியாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை சௌபாக்கிய பாதையில் இட்டுச் செல்வதாக கூறி ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கம் சிறிய குடும்பமொன்றை ஆறு லட்சம் ரூபா கடனாளியாக்கியுள்ளது என குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்ட 15 மாத காலப் பகுதியில் தனி நபர் ஒருவர் ஒன்றரை லட்சம் ரூபா கடனாளியாகியுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நோக்கற்ற இந்த ராஜபக்ச குடும்பம் சுற்றாடல், பொருளாதாரம், கல்வி மற்றும் விவசாயம் உள்ளிட்ட அனைத்தையும் அழித்துச் செல்வதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச, சமல் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, சசீந்திர ராஜபக்ச உள்ளிட்ட குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இணைந்து ஆட்சி நடாத்தினாலும் நாட்டை மீட்டு எடுக்கும் சக்தி அவர்களிடமில்லை என கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை