சங்கானை பிரதேச செயலர் பிரிவில் இரண்டாம் நாளாகவும் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணி
யாழ், மாவட்டத்தின் பல பகுதிகளில், இரண்டாம் நாளாகவும், 60வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டம் நடைபெறுகின்றது.
அந்தவகையில் இன்று, சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட அராலி சரஸ்வதி மஹா வித்தியாலயத்தில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணி நடைபெறுகிறது.
அங்கு மக்கள் பெருந்திரளாக வந்து, தடுப்பூசி ஏற்றிக்கொள்வதில் மும்முரமாக ஈடுபடுவதை அவதானிக்க முடிகிறது.
கருத்துகள் இல்லை