ஆவா குழுவை அடக்க முடியாவிட்டால் வெளியேறுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்வோம் - பாதுகாப்பு தரப்புக்கு சிவாஜி சவால்
"ஆவா" வாள்வெட்டுக் குழுவை பாதுகாப்பு தரப்பினரால் அடக்க முடியாவிட்டால் தமிழர் பகுதிகளிலிருந்து பாதுகாப்புத் தரப்பினர் வெளியேறுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்வோம் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் சவால் விடுத்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
வர் மேலும் தெரிவிக்கையில் யாழ் மாவட்டத்தைப் பொருத்தவரை வாள்வெட்டு கலாச்சாரம் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது.
அதிக அளவிலான பாதுகாப்பு தரப்பினர் இங்கு நிலைகொண்டுள்ள நிலையில் எவ்வாறு வாள் வெட்டு கும்பல்கள் சுதந்திரமாகச் செயற்படுகின்றன.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறைவு செய்தோம் என மார்தட்டிக் கள்ளும் இலங்கை பாதுகாப்பு தரப்புசமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் ஆவா குழுவை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது.
தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களை மட்டுமல்ல சிங்கள மக்களையும் ஒடுக்குவதற்கான செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் திரண்டு எழும்போது கொரோனா தனிமைப்படுத்தல் சட்டங்களை காரணங்கட்டி நீதி கேட்பவர்களை கைது செய்யும் செயற்பாடுகள் அண்மையில் அரங்கேறியுள்ளது.
தற்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பதவியேற்ற போது வெடி கொளுத்தி கொண்டாடியவர்களுக்கு தனிமைப்படுத்தல் சட்டம் கிடையாது பொலிசார் வேடிக்கை பார்த்தனர் .
அதேபோல் யாழ்ப்பாணத்திறகு விஜயம் செய்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச பங்கு வடமராட்சியில் பங்குபற்றிய நிகழ்வுக்கு சுமார் 50 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் குறித்த நிகழ்வில் 300க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டதுடன் பாதுகாப்பு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
தற்போதைய அரசாங்கமானது தனக்கு ஏற்ற முறையில் சட்டங்களை செயற்படுத்தி வருகின்ற நிலையில் சர்வதேச சமூகம் உற்று நோக்கி வருகிறது.
சுமார் 700 மேற்பட்ட ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள நிலையில் இலங்கை அரசு ஜிஎஸ்பி வரிச்சலுகையை வருவதற்கு திண்டாடி வருகிறது.
ஆகவே சர்வதேசம் கண்ணை மூடிக் கொண்டு இருக்கிறது என நினைத்து இலங்கை அரசாங்கம் எதை வேண்டுமானாலும் செய்து விடலாம் என நினைப்பது பூனை கண்ணை மூடி பால் குடித்தால் யாருக்கும் தெரியாது என நினைப்பதற்கு ஒப்பானது என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை