ஹைட்டி ஜனாதிபதி படுகொலை!
ஹைட்டி ஜனாதிபதியின் இல்லத்தின் மீது ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் ஜனாதிபதி ஜொவெனெல் மொய்ஸ் உயிரிழந்துள்ளார்.
அவரது மனைவி காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அந்நாட்டு பிரதமர் க்லோட் ஜோசப், வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஜொவெனெல் மொய்ஸ் ஆயுதக் குழு ஒன்றால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதலின் போது ஜனாதிபதியின் மனைவி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை