எரிபொருள் விலையை குறைக்க எந்த வழியும் இல்லை ! - அரசாங்கம் அறிவிப்பு
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகமாக இருப்பதால் உள்நாட்டில் எரிபொருள் விலையை குறைக்க தற்போது எந்த வழியும் இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் இதனை தெரிவித்துள்ளார்.
“தற்போது உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 76 அமெரிக்க டாலர்கள் வரை உயர்ந்துள்ளது.
இதுபோன்ற சூழ்நிலைகளில் விலைகளை மேலும் அதிகரிப்பதை விட தற்போதைய விலை நிலையை பராமரிப்பது அரசாங்கத்திற்கு சவாலாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை