அரசிற்கு எதிரான போராட்டம் ஒன்று யாழில் முன்னெடுப்பு!
யாழ். பேருந்து நிலையத்திற்கு முன்பாக, காலை 10.30 மணியளவில், அரசுக்கு எதிரான போராட்டம் ஒன்றினை அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கம் இன்று புதன்கிழமை முன்னெடுத்துள்ளது
ஆசிரியர் மாணவர் பெற்றோர் களை துன்புறுத்துகின்றன கல்வி நெருக்கடிக்கு உடனடியாக தீர்வினை வழங்கு, 24 வருட ஆசிரியர்-அதிபர் சம்பளம முரண்பாட்டுக்கு உடனடியாக தீர்வு வழங்கு, இலவசக் கல்வியை இராணுவ மயமாக்கும் கொத்தலாவல சட்டமூலத்தை உடனடியாக இரத்துச் செய் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை