• Breaking News

    இலங்கையில் கோடீஸ்வர்களுக்கு இளம் பெண்களை விற்பனை செய்யும் புதிய வியாபரம்

     இலங்கையில் கோடீஸ்வரர்களுக்கு இளம் பெண்களை விற்பனை செய்யும் வியாபாரத்தில் ஈடுபடும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கல்கிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    புற்று நோயினால் பாதிக்கப்பட்ட 21 வயதுடைய இளம் பெண்ணை 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய பேரம் பேசப்பட்டுள்ளது.

    பொலநறுவை பிரதேச சபைக்கான நிர்மாணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கோடீஸ்வர வர்த்தகருக்கு விற்பனை செய்வதற்கு முயன்ற போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இதற்கு முன்னர் 15 வயதுடைய சிறுமியை இளம் பெண் என கூறி அந்த வர்த்தகருக்கு விற்பனை செய்தவரும் மெல்டா என்ற பெயருடைய இந்த வர்த்தகர் என தெரியவந்துள்ளது.

    தற்போது கைது செய்யப்பட்டுள்ள வர்த்தகரின் கையடக்க தொலைபேசியை தங்கள் பொறுப்பில் எடுத்து ஆய்வு செய்த போது புற்று நோயினால் பாதிக்கப்பட்ட பெண்ணையும் விற்பனை செய்ய தயார் செய்துள்ளதாக தெரியவந்துள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad