பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இலங்கை வங்கி பாதுகாப்பு பெட்டகத்திற்கு மாற்றப்பட்ட விலை மதிக்க முடியாத இரத்தினக்கற்கள்!
ஸ்ரீலங்காவின் தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை வசமிருந்த விலை மதிக்க முடியாத மிக பெறுமதி வாய்ந்த மூன்று இரத்தினக்கற்கள், இலங்கை வங்கியின் பாதுகாப்பு பெட்டியில் இன்று வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கொள்ளுபிட்டி பகுதியிலுள்ள ஸ்ரீலங்காவின் தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை கட்டிடம் தாழிறங்குவதால், அதிகார சபையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.
இதையடுத்து, அந்த விடயத்திற்கு பொறுப்பான ஸ்ரீலங்கா இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்தவின் ஆலோசனைக்கு அமைய, தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் பணிகள், நாரஹேன்பிட்டியிலுள்ள அமைச்சு கட்டடத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் நடவடிக்கைகள், மீண்டும் வழமைக்கு திரும்பும் வரை, அதிகார சபை வசமிருந்த விலை மதிக்க முடியாத, பெறுமதி வாய்ந்த இரத்தினக்கற்கள் இன்று இலங்கை வங்கியின் பாதுகாப்பு பெட்டியில் வைக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா காவல்துறை விசேட அதிரடிப்படையின் உயர் பாதுகாப்புக்கு மத்தியில் இந்த இரத்தினக்கற்கள், இலங்கை வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
Get in Touch With Us to Know More

கருத்துகள் இல்லை