• Breaking News

    இரண்டு முகக் கவசங்கள் அணிவது தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

    ஒரே நேரத்தில் இரண்டு செர்ஜிகல் முகக் கவசங்கள் அல்லது N95 முகக் கவசங்கள் இரண்டு அணிவது பொறுத்தமற்றது என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் இயக்குநர் வைத்தியர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

    கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    ஒரு முகக் கவசத்தை சரியான முறையில் அணிவது மாத்திரமே அவசியமாகும். தாம் அணிந்திருக்கும் முகக் கவசம் உரிய முறையில் முகத்துடன் இறுக்கமாக இல்லை என யாருக்காவது உணர்ந்தால் அவர்கள் தாங்கள் அணிந்திருக்கும் முகக் கவசத்திற்கு வெளியே ஒரு சாதாரண துணி முகக் கவசத்தை மாத்திரமே அணிய வேண்டும்.

    ஒரே நேரத்தில் இரண்டு செர்ஜிகல் முகக் கவசங்கள் அல்லது N95 முகக் கவசங்கள் இரண்டு அணிவது ஏற்கத்தக்கது அல்ல. உள்ளே ஒரு செர்ஜிகல் முகக் கவசம் வெளியே ஒரு N95 முகக் கவசம் அணிவது போன்ற நடைமுறையும் ஏற்கத்தக்கது அல்ல.

    நாம் அணிந்திருக்கும் ஒரு முகக கவசம் முகத்தை மறைத்து நன்கு இறுக்கமாக உள்ளதா என்பதனையே உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு இறுக்கமாக இல்லை என உணர்ந்தால் மாத்திரம் வெளியே ஒரு துணி முகக் கவசத்தை அணியுங்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad