பிரித்தானியாவில் இருந்து யாழ் திரும்பிய வைத்தியருக்கு நேர்ந்த சோகம்!
லண்டனிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பிய மருத்துவர் ஒருவர், மாரடைப்புக் காரணமாக வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்த சடலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அச்சுவேலி தோப்பு பகுதியை சேர்ந்த சிற்றப்பலம் இராசலிங்கம் (வயது-80) என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் லண்டனிலிருந்து கடந்த ஜூன் 29ஆம் திகதி அச்சுவேலி திரும்பிய நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. இதன்போது சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகளில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்றுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
இதனால் பொலிஸ் விசாரணையினை தொடர்ந்து சடலத்தை சுகாதார நடைமுறைகளின் கீழ் மின் தகனம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Get in Touch With Us to Know More

கருத்துகள் இல்லை