ஈஸ்டர் தாக்குதல் - மறைக்கப்பட்ட மர்மங்கள் ஏராளம் - அம்பலமாகிய தகவல்
“பலரை நீதிமன்றத்திற்கு அழைத்து வருவதன் மூலம் ஈஸ்டர் தாக்குதலை மறைக்க முயற்சிக்க வேண்டாம்" என்று அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்.
இன்று கொழும்பிலுள்ள பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் குறித்து தாம் திருப்தி அடையவில்லை என்று தெரிவித்த கர்தினால், தற்போதைய நிலைமை மற்றும் அதன் விசாரணைகள் மற்றும் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த தனது கருத்துக்களை உள்ளடக்கிய ஒரு கடிதத்தை இன்று ஜனாதிபதிக்கு அனுப்பவுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் என்றும், மேலும் தீவிரமான விசாரணையை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
"இந்த தாக்குதலுக்குப் பின்னால் ஏராளமான மறைக்கப்பட்ட மர்மங்கள் உள்ளன. அவை என்ன என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். இந்த வழக்கில் உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிப்பது கேள்விக்குரியதாக இருக்கும்.
தற்போது அரசியல் தலைமை விரும்பியபடி செயல்படும் ஒரு பொலிஸ் படையினரும், அரசியல் அதிகாரிகளின் விருப்பப்படி செயல்படும் ஒரு குற்றவியல் விசாரணைத் துறையும், ஒரு சட்ட அமைப்பும் அரசியல் தலைவர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது, ”என்று கர்தினால் கூறினார்.
இருப்பினும், ஈஸ்டர் தாக்குதலுக்கான மூல காரணத்தைக் கண்டுபிடிப்பதற்கான போராட்டம் முடிவடையாது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை