கடும் எச்சரிக்கை விடுத்துள்ள பிரதமர் மஹிந்த
சமகால அரசாங்கத்தை பகிரங்கமாக விமர்ச்சிக்கும் எவரும் அரசாங்கதை விட்டு வெளியேற முடியும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எச்சரித்துள்ளார்.
மக்கள் மத்தியில் அரசாங்கத்தை அவமதிக்கும் செயற்படும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதற்காக கதவு திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“அரசாங்கத்தில் எதுவும் பிரச்சினை அது குறித்து எங்களிடம் கலந்துரையாட வேண்டும். மாறாக அதனை நாட்டு மக்களிடம் பகிரங்கப்படுத்தும் நடைமுறையை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. இவ்வாறு பகிரங்கப்படுத்தி மக்களின் கவனத்தை ஈர்த்து வீரராக மாறுவதற்கே பலர் முயற்சிக்கின்றனர். அவ்வாறு அரசாங்கத்தை குறைத்து மதிப்பிட்டு அவமதிக்கும் எவரும் அரசாங்கத்தை விட்டு வெளியே கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதென” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை