• Breaking News

    மாங்குளத்தில் காணாமல் போன சிறுவன் கூறும் அதிர்ச்சித் தகவல்!

     மாங்குளம் - துணுக்காய் வீதியில் குளிக்கச்சென்ற நிலையில் காணாமல் போன சிறுவன் வீடு திரும்பியுள்ளார்.

    உதயசூரியன் நகர் பகுதியில் வசிக்கும் விஜயகுமார் விதுசன் என்ற 14 வயதுடைய சிறுவன் கடந்த 10ஆம் திகதி இரவு முதல் காணாமல் பேயிருந்தார்.

    இந்த நிலையில் குறித்த சிறுவன் இன்று மாலை வீடு திரும்பியுள்ளார். இதுகுறித்து சிறுவன் கருத்து தெரிவிக்கையில்,

    “நான் குளிக்கச் சென்றவேளை யாரோ என்னை கூப்பிட்டது போல இருந்தது, நான் காட்டிற்குள் சென்று விட்டேன். என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. அதன் பின்னர் கொக்காவில் காட்டுப்பகுதியில் வெளியேறினேன் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது” எவ்வாறு காட்டிற்குள் சென்றேன் என்றும் தெரியாது என்று சிறுவன் கூறியுள்ளார்.

    குறித்த காட்டுப்பகுதியில் காட்டு பேய் இருப்பதாக பிரதேச மக்கள் தெரிவித்து வரும் நிலையில் குறித்த சிறுவனுக்கு நடந்த அமானுஷ்ய சம்பவம் அப்பகுதியில் பீதியை மேலும் அதிகரித்துள்ளது. 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad