• Breaking News

    பயங்கரவாத தடைச்சட்ட விவகாரம்- மீண்டும் ஸ்ரீலங்கா விடுத்துள்ள அறிவிப்பு!

    ஸ்ரீலங்கா அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உரிய மற்றும் பன்முக உரையாடலுக்காக தொடர்ச்சியாக பொறுப்புடன் செயலாற்றும் என ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. 

    அத்துடன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் சில விதிகளை மீள ஆராய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் அறிவித்துள்ளது.

    மேலும் இருதரப்பு ஒத்துழைப்பின் சகல பிரிவு மீளாய்வு அடுத்த வருடம் முதல் காலாண்டில் ஒன்றிணைந்த ஆணைக்குழுவை கூட்டி கலந்துரையாட எதிர்பார்க்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அண்மையில் ஸ்ரீலங்காவில் பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படவேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதில், இலங்கையில் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கான அழுத்தங்களை பிரயோகிக்க ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    இந்தநிலையில் ஸ்ரீலங்காவின் நல்லிணக்கத்திற்கான முன்னேற்றம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் பிரஸ்தாபிக்கப்பட்ட போது, போதிய விளக்கம் வழங்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    ஜீ.எஸ்.பி கண்காணிப்பு சுழற்சி தொடர்பிலான பின்னணிக்காக விரிவான பதிலை ஸ்ரீலங்கா அரசாங்கம் ஐரோப்பிய ஆணைக்குழுவிற்கு அளித்துள்ளது என, ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad