திருட்டுத்தனமாக தடுப்பூசி போட்டுக்கொண்ட கொரோனா நோயாளி உள்ளிட்ட இருவர்!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரும் தனிமைப்படுத்தப்பட்ட நபர் ஒருவரும் மீகொடையில் உள்ள தடுப்பூசி மையத்திற்கு வருகை தந்து திருட்டுத்தனமாக தடுப்பூசி பெறப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மீகொட பொது சுகாதார ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
பானலுவ பகுதியில் உள்ள குறித்த நபருக்கு கடந்த 2ஆம் திகதி தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் ஜூலை 10ஆம் திகதி வரை தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டு இருந்தனர்.
எனினும் இதற்கிடையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரும், தனிமைப்படுத்தப்பட்ட நபரும் கொரோனா தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
ஒரு கொரோனா நோயாளி தடுப்பூசி பெற வந்ததால் அங்கு தடுப்பூசி போட்டவர்கள் மற்றும் பெற்றுக்கொள்ள வந்தவர்கள் என அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை மீறியதற்காகவும், கிரிமினல் குற்றத்தைச் செய்ததற்காகவும் இருவர் மீது வழக்குத் தொடரப்படும் என்று மீகொட பொது சுகாதார ஆய்வாளர் ராஜித புஷ்பகுமார கூறுகிறார்.
கருத்துகள் இல்லை