• Breaking News

    பிறந்த சிசுவை கொலை செய்து எரியூட்டிய தாய்- நீதிமன்றின் அதிரடி உத்தரவு!

     கந்தளாய் – பேராறு பிரதேசத்தில் பிறந்த பெண் சிசுவை கொலை செய்து தீ வைத்து எரித்த தாய் ஒருவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டள்ளது.

    இம்மாதம் 28 ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி தேனவது இன்று உத்தரவிட்டுள்ளார்.

    கந்தளாய் பேராறு மத்ரஸாநகர் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய சுபியான் பாரூக் பௌமியா என்ற பெண்னொருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

    கடந்த ஞாயிற்றுக்கிழமை தவறான உறவின் மூலம் பிறந்த சிசுவை கொலை செய்து எரித்த குற்றச் செயலுடன் தொடர்புடைய மூன்று பிள்ளைகளின் தாயாரை கந்தளாய் பொலிஸார் கைது செய்து கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில்முன்னிலைப்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

    சந்தேக நபரின் கணவர் வெளிநாடு சென்றுள்ள நிலையிலே இவ்வாறு நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad