விழி பிதுங்கும் விஞ்ஞானிகள்! இந்த குகைக்குள் ஒருமுறை சென்றுவிட்டால் திரும்ப வருவது ரொம்ப கஷ்டம்... ஏன் தெரியுமா?
உலகின் பல இடங்கள் மர்மங்கள் நிறைந்த பகுதியாக இருக்கிறது. பலருக்கு இவ்வாறான இடங்களை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கிறது. இந்தியாவில் உள்ள பல மர்மமான இடங்களை பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள்.
ஆனால் இவ்வாறான ஒரு இடத்தை பற்றி நீங்கள் படித்திருக்கும் வாய்ப்பு குறைவு தான்.
இந்த இடம் மேகாலயா மாநிலத்தில் உள்ள 2016ம் ஆண்டு தான் இந்த இடமே கண்டு பிடிக்கப்பட்டது.
சில விஞ்ஞானிகள் ஒன்றாக சேர்ந்து கண்டுபிடித்த இந்த இடம் ஒரு குகை இந்த குகைக்குள் ஒரு முறை சென்று விட்டால் திரும் வருவது அவ்வளவு சுலபமில்லை. இந்த குகை ஒரு புதிர் போல அமைக்கப்பட்டுள்ளது. இந்த குகையின் பெயர் கிரீம் புரி,
சுமார் 24.5 கிலோ மீட்டர் நீளம் கொண்டது இந்த குகை. மொத்தம் 13 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த குகை அமைந்துள்ளது. இந்த பகுதியில் மாசின்ராம் அருவி உள்ளது. உலகில் மிக உயரமான அருவி இது தான்.
இந்த குகைக்குள் நூற்றுக்கும் அதிகமான சிறிய மற்றும் பெரிய பாதைகள் உள்ளன. அவை ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. ஒரே மாதிரியாக இல்லாமல் முற்றிலும் வேறு மாதிரியான தோற்றம் கொண்டது. உள்ளே ஒருவர சென்றால் எந்த வழியாக வந்தோம், எந்த வழியாக வெளியே செல்ல வேண்டும் என குழப்பம் ஏற்படும் அளவிற்கு அமைந்துள்ளது.
இந்த குகையை பெரும்பாலும், தவளைகள், பெரிய சிலந்திகள், வௌவால்கள் ஆக்கிரமித்துள்ளன. இந்த குகைக்குள் சென்ற சில விஞ்ஞானிகள் அங்கு திமிங்கலத்தின் பல், 6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் எலும்புகளை எடுத்துள்ளனர். இதை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த குகைக்கு இருக்கும் ஒரு ஆச்சரியமான அம்சம் என்னவென்றால் இந்த குகைக்குள் எப்பொழுதும் தட்ப வெட்ப நிலை 16-17 டிகிரிதான் இருக்கும், வெளியில் எவ்வளவு வெப்பநிலை மாறினாலும் இங்கு வெப்பநிலை மாறுவதில்லை. இந்த குகைக்குள் ஆக்ஸிஜன் தட்டுபாடு இல்லை.
இங்குள்ள சிறிய சிறிய ஓட்டைகள் வழியாக எப்பொழுதும் காற்று வந்து கொண்டேயிருக்கிறது. இதற்கு முன்னர் உலகின் மிகபெரிய குகையாக இருந்தது வெனிசுலா நாட்டில் உள்ள எடோ ஜூலியா என்ற குகை தான். ஆனால் இந்த குகை அதைவிட 6 ஆயிரம் மீட்டர் அதிக நீளம் கொண்டது.
கருத்துகள் இல்லை