• Breaking News

    ஊடகங்களை அடக்க வேண்டிய தேவை எமக்கில்லை! கெஹெலிய பதிலடி

     ஊடகங்களினதும்,பொது மக்களினதும் பேச்சு சுதந்திரத்தை முடக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது. நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் கடந்த வாரம் இடம் பெற்ற போராட்டத்தின் போது பாதுகாப்பு தரப்பினரால் தாக்கப்பட்டதாக குறிப்பிடப்படும் ஊடகவியலாளர்கள் முதலில் முறைப்பாடளிக்க வேண்டும். முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

    அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் அந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

    ஊடகவியலாளர்களினதும், நாட்டு மக்களினதும் பேச்சு சுதந்திரத்தை முடக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது.

    அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரத்தை ஒரு தரப்பினர் தவறான வழியில் பயன்படுத்தும் போது அதற்கு எதிராக நடவடிக்கைகள் உரிய நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும். இதனை பேச்சு சுதந்திரத்திற்கு எதிராக அரசாங்கம் செயற்படுகிறது என்று குறிப்பிட முடியாது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad