பொலிஸ் அதிகாரிகளாக காட்டிக்கொண்ட கொள்ளையர்கள் மூவர் பொலிஸில் சிக்கினர்!
பொலிஸ் அதிகாரிகள் என போலியான அடையாளத்தைக் காட்டி பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களை வத்தளை பகுதியில் வைத்து நேற்று கைது செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் சேதவத்தை, குருநாகல் மற்றும் வத்தளையில் வசிப்பவர்களாவர்.
பொலிஸ் அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்ய தயாரிக்கப்பட்ட போலி அடையாள அட்டை அவர்களிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபோன்ற 17 கொள்ளைகள் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை