முன்னாள் இராணுவ அதிகாரியை கொடூரமாக கொலை செய்த நால்வர்!
வெலிகம – கப்பரதொட பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கி, முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் நால்வரை கைதுசெய்வதற்காக காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் இச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, ஏனைய சந்தேகநபர்கள் தொடர்பில் தெரியவந்துள்ளது.
வெலிகம – வல்லிவல பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவரை இன்று மாத்தறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
மேலும் வெலிகம கப்பரதொட பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு 10.45 மணியளவில் 50 வயதான குறித்த முன்னாள் இராணுவ அதிகாரி கொலை செய்யப்பட்டிருந்தார்.
அத்தோடு இச்சம்பவத்தில் 52 வயதான மற்றொரு நபர் காயமடைந்த நிலையில், மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
கருத்துகள் இல்லை