பெண்ணொருவரின் மோசமான செயற்பாடு - அம்பலப்படுத்தும் பொலிஸார்
கண்டியில் ஒரே நேரத்தில் 2 கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண் திட்டமிட்டு அவ்வாறு செய்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொடர்னா கொவிட் தடுப்பூசிகள் இரண்டினை தனக்கு ஒரே நேரத்தில் செலுத்தியதாக குற்றம் சுமத்தி சுகாதார அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.
அந்த செயலுக்காக அவர் இழிப்பீடு பெற்றுக் கொள்ளும் முயற்சியிலேயே அவ்வாறு செய்துள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பொலிஸ் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது வெளியாகியுள்ள தகவலுக்களுக்கமைய சுகாதார அதிகாரிகள் தடுப்பூசி பெற்றுக் கொண்ட நபர்களை 30 நிமிடம் வேறு இடத்தில் தங்க வைத்துள்ளனர். எனினும் அந்த பெண் அங்கிருந்து இரகசியமான வெளியேறி மீண்டும் தடுப்பூசி பெறும் நபர்களுக்கு மத்தியில் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
எனினும் எவ்வித கேள்விகளும் கேட்காமல் இரண்டாம் தடுப்பூசி செலுத்தியமை தொடர்பிலேயே சுகாதார பிரிவினர் மீது பாரிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அந்த பொறுப்பில் இருந்து சுகாதார பிரிவு அதிகாரிகள் தப்புவதற்கு எவ்வித வாய்ப்புகளும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, இந்த பெண் தொடர்பில் கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமில ரத்நாயக்கவின் கீழ் பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தற்போது கிடைத்துள்ள தகவலுக்கமைய குறித்த பெண் போதை பொருள் விற்பனை, போலி குற்றச்சாட்டு சுமத்தல் போன்ற பல்வேறு குற்ற செயல்களுக்கு தொடர்புடையவர் என பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தனது மனைவிக்கு இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டமை தொடர்பில் அவரது கணவர் பேராதனை பொலிஸ் நிலையத்தில் கடந்த 20ஆம் திகதி முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் இழப்பீடு பெறுவதற்கு அவசியம் என கூறி அந்த பெண் நேற்றைய தினம் சட்டத்தரணி ஆலோசனைக்கமைய கண்டி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
கருத்துகள் இல்லை