இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வு - தட்டுப்பாடு
இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 124000 ரூபாவாக அதிகரித்துள்ளது.
நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு மத்தியில் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. விலை உயர்வு காரணத்தால் தங்க வியாபாரிகள் குறிப்பிட்ட அளவு தங்கத்தை மாத்திரமே சந்தையில் விநியோகித்துள்ளனர்.
இதனால் தங்கத்திற்கு தட்டுப்பாடு சந்தையில் ஏற்பட்டுள்ளது. எனினும் இது தற்காலிக நிலை எனவும் நாட்டிற்கு தேவையான தங்கம் விரைவில் கொள்வனவு செய்யப்படும் எனவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது. அதன்பின் தங்கத்தின் விலை குறையும் எனவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை