தனிமைப்படுத்தல் மையத்தில் வைத்து கஞ்சாவுடன் கைதானவருக்கு ஏழாயிரம் ரூபா அபராதம்!
வட்டுக்கோட்டை கொரோனா தனிமைப்படுத்தல் மையத்தில் வைத்து கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு மல்லாகம் நீதிமன்றம் இன்று (2021.07.15) 7000 ரூபாவினை அபராதமாக விதித்துள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவது,
நேற்றைய தினம், (2021.07.14) வட்டுக்கோட்டை தனிமைப்படுத்தல் மையத்தில் உள்ளவருக்கு வழங்குவதற்காக 2000 மில்லிக்கிராம் கஞ்சாவினை எடுத்துச் சென்ற 21 வயது இளைஞன் ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் இன்று மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தியபோது அவருக்கு நீதிமன்றினால் ரூபா 7000 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
-----------------------------------------------
Tamilus இன் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
கருத்துகள் இல்லை