• Breaking News

    ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி - கல்வியமைச்சர் வெளியிட்ட தகவல்

     நாட்டிலுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் கொவிட் தடுப்பூசிகளை வழங்கும் நடைமுறை எதிர்வரும் திங்கள்கிழமை (12) முதல் தொடங்கும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

    ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தை ஒரு வாரத்திற்குள் நடத்தி முடிக்கும் வகையில் கடந்த வாரம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    அதன்படி, 10,155 பாடசாலைகளின் அனைத்து ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் அனைத்து கல்விசாரா ஊழியர்களுக்கும் தடுப்பூசிகள் கிடைக்கும் என்று அமைச்சர் கூறினார்.

    ஜனாதிபதியின் நேரடி தலையீடு காரணமாக, இந்த பணி விரைவில் முடிக்கப்பட உள்ளது என்றார்.

    அதன்படி, இன்று காலை அனைத்து மாகாண ஆளுநர்கள், தலைமை செயலாளர்கள், மாகாண கல்வி பணிப்பாளர்கள் மற்றும் சுகாதார பிரிவு ஆகியோருடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    "அதிபர்கள் ஊழியர்களை நியமித்து, அந்தந்த மையங்களுக்கு ஆசிரியர்களை அனுப்பி தடுப்பூசியை போடுமாறும் இதனால் பாடசாலைகள் முதல் கட்டமாக விரைவில் திறக்கப்படும்" என்று அமைச்சர் மேலும் கூறினார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad