• Breaking News

    பசில் ராஜபக்சவின் மீள் பிரவேசம்! மட்டக்களப்பில் வெடி கொளுத்தி கொண்டாட்டம்!

    இன்று காலை சரியாக 10.10 மணியளவில் பசில் ராஜபக்ச நிதி அமைச்சராக பதவியேற்றதையடுத்து மட்டக்களப்பில் பல பகுதிகளிலும் வெடி  கொளுத்தி  கொண்டாடியுள்ளனர்.

    மட்டக்களப்பு மாவட்ட பொது ஜன பெரமுன அமைப்பாளார் சந்திரகுமார் களத்தில் இருந்து வெடி கொளுத்தி கொண்டாடியுள்ளார்.

    இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பசில் ராஜபக்ச நிதி அமைச்சராக பதவி ஏற்றதுடன் அதன் பின்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

    இந்த நிலையில் அவரின் ஆதரவாளர்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.





    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad