வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாப மரணம்
வவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் இன்று(08) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சியிலிருந்து புத்தளம் நோக்கி பொருட்களை ஏற்றிச்சென்ற பாரவூர்தி புளியங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்து விபத்திற்குள்ளாகியது.
விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், வாகனத்தின் சாரதி படுகாயங்களிற்குள்ளாகியுள்ளார்.
சம்பவத்தில் மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த பிரவீன் வயது 21 என்ற இளைஞரே மரணமடைந்துள்ளார்.
விபத்து தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை