• Breaking News

    கோட்டாபயவுக்கு எதிராக களமிறங்கும் பசில்

    எதிர்வரும் ஜனாதிபதி தேரதலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறுவுனர் பசில் ராஜபக்ஷ களமிறங்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட தெரிவித்துள்ளார்.

    அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பசில் ராஜபக்ஷவை கட்டாயமாக முன் நிறுத்துவோம் என கெட்டகொட குறிப்பிட்டுள்ளார்.

    பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காக தான் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறப்பினர் பதவியில் இருந்து விலகியதாக ஜயந்த கெட்டகொட தெரிவித்துள்ளார்.

    பசில் ராஜபக்ஷ எதிர்வரும் நாட்களில் நிதி அமைச்சராக பதவி பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    சிங்கள ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    அதேவேளை சமகால ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad