• Breaking News

    வியாழேந்திரன் வீட்டின் முன்னால் இடம்பெற்ற படுகொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

    இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீட்டுக்கு முன்னால் அவரது மெய்ப்பாதுகாவலரால் சுட்டுக்கொல்லப்பட்ட பாலசுந்தரத்தின் மரணத்திற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது

    இன்று காலை மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முற்பட்டவர்கள் மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இன்று காலை 10 மணியளவில் மட்டக்களப்பு நகர்ப் பகுதிக்குள் வாகனமொன்றில் வந்து போராட்டம் மேற்கொள்ள முற்பட்டவர்கள் மட்டக்களப்பு மாவட்ட தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரியால் அச்சுறுத்தப்பட்டு விரட்டியடிக்கப்பட்டனர்.

    இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் வேறொரு இடத்தில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துச் சென்ற போது குறித்த வாகனத்தையும் அதில் வந்தவர்களையும் கைது செய்து மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.






    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad