ரிஷாட் பதியுதீன் வீட்டில் சிறுமிக்கு நடந்த கொடூரம் -யார் அந்த இளைஞன்?
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணி புரிந்த நிலையில் தீ காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமிக்கு நடந்த கொடுமைகள் தொடர்பில் அவரது தாயார் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இதன்படி ரிஷாட் பதியுதீன் வீட்டில் தனது மகள் பணிபுரிந்த வேளை இளைஞர் ஒருவர், தனது மகளை தொடர்ச்சியாக தும்புத்தடியால் தாக்கியுள்ளதாக, உயிரிழந்த ஹிஷாலினியின் தாய் ஆர்.ரஞ்ஜனி தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அங்குள்ள இளைஞர் ஒருவர் தன்னை தொடர்ச்சியாக தும்புத்தடியால் தாக்கி வருவதாக, தனது மகள் தொலைபேசியூடாக தனக்கு தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது, தனது மகளிடமிருந்து தொலைபேசியை பறித்து, ரிஷாட் பதியுதீனின் மனைவியை, ஹிஷாலினி எதிர்த்து பேசுவதாக, இளைஞன் ஒருவர் தன்னிடம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். தனது குழந்தையை அடிக்க வேண்டாம் என தான் ரிஷாட் பதியுதீனின் மனைவியிடம் கேட்டுக்கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை