யாழ்ப்பாணத்தின் கொவிட் பலி 134ஆக உயர்வு
யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை உறுதிசெய்துள்ளது.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஏழாலையைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும், புங்குடுதீவைச் சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவருமே இன்று உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் யாழ். மாவட்டத்தில் கொவிட் நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134ஆக உயர்வடைந்துள்ளது.
கருத்துகள் இல்லை