• Breaking News

    155வது நாளாகவும் தொடர்கிறது சுகாதார தொண்டர்களின் போராட்டம்!

     இன்றைய தினம் (2021.08.02) வடமாகாண சுகாதார ஊழியர்களால் ஆளுநர் செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

    தமக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்படும் வேலையானது வழங்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்து 155 நாட்களாக தொடர் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

    இந்தநிலையில் 155 வது நாளான இன்று பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர். 

    இதன்போது "நியமன கடிதத்திற்கு பதில் கூறுங்கள், ஜனாதிபதியின் பணிபுரையை நிறைவேற்றுங்கள், கிடைக்கப்பெற்ற நியமனங்களுக்கு பதில் என்ன?, வடக்கு மாகாண பிரதம செயலாளரே பதில் கூறுங்கள்" என எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad