யாழ். கொடிகாமத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
யாழ். கொடிகாமம் நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கொடிகாமம் பகுதியில் வியாபாரம் செய்யும் வியாபாரி ஒருவருக்கு covid-19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, கடந்த 13.08.2021 அன்று கொடிகாமம் சந்தை மற்றும் அதற்கு அண்மித்த பகுதிகளில் 84 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதனடிப்படையில் 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை