• Breaking News

    ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுவனை மயக்கி இளம் பெண் செய்த செயல்! விசாரணையில் பகீர்!

     


    ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுவனை திருமணம் செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    பொள்ளாச்சியில் 19 வயது இளம்பெண் ஒருவர் தனியார் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். இவர், அந்த பங்கிற்கு அடிக்கடி பெட்ரோல் நிரப்ப வந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    சிறுவனை 19 வயது இளம்பெண் காதலிப்பதாக கூறி கடந்த சில தினங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதுபற்றி சிறுவனின் பெற்றோர்களுக்கு தகவல் தெரியவர சிறுவனின் பெற்றோர் புகார் அளித்ததின் பேரில் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

    இதனையடுத்து, கடந்த சில தினங்கள் முன்பு சிறுவனுக்கு ஹிரன்யா அறுவை சிகிச்சை செய்வதற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறுவனை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு சென்ற பெண் சிறுவனிடம் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறி பொள்ளாச்சி பகுதியில் உள்ள கோவிலுக்கு அழைத்துச்சென்று கட்டாய திருமணம் செய்து உள்ளார்.

    அதன் பின்னர், வீட்டிற்கு வந்த சிறுவனிடம் பெற்றோர் விசாரித்த பொழுது அந்த பெண்ணும் தானும் திருமணம் செய்துகொண்டதாக கூறி உள்ளார்.அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பொள்ளாச்சி மகளிர் காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில் 17 வயது சிறுவனை கட்டாயப்படுத்தி இளம்பெண் திருமணம் செய்தது தெரியவந்தது.

    இதனால், அந்த 19 வயது இளம்பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    இதுவரை சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் நபர்கள் மற்றும் கட்டாய திருமணம் செய்யும் நபர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கபட்டு வந்த நிலையில் தற்போது 17 வயது சிறுவனை திருமணம் செய்த பெண் ஒருவர் கோவை மாவட்டத்திலேயே முதல் முறையாக போக்சோவில் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad