கல்லுண்டாயில் அரச பேருந்து தடம்புரழ்வு - 25பேர் வைத்தியசாலையில்!
இன்றையதினம் காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று கல்லுண்டாய் பகுதியில் விபத்துக்குள்ளானது.
இக்கோர விபத்தில் இருவர் படுகாயமடைந்தது உட்பட 25 பேர் காயமடைந்துள்ள நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தனியார் பேருந்து ஒன்றும் விபத்துக்குள்ளான குறித்த பேருந்தும் ஒன்றையொன்று முந்திச் செல்ல முற்பட்ட வேளையே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
விபத்திற்குள்ளான பேருந்தின் சாரதி மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
.
கருத்துகள் இல்லை