மாவனெல்ல புத்தர் சிலை விவகாரம்! தகவல் வழங்கியவருக்கு 25 இலட்சம் ரூபா வெகுமதி
மாவனெல்லையில் புத்தர் சிலைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில், காவல்துறைக்கு தகவல் வழங்கியமையால், தாக்குதலுக்கு இலக்கான மொஹமட் ராசிக் மொஹமட் தஸ்லினுக்கு 25 இலட்சம் ரூபா வெகுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இந்த வெகுமதியை வழங்கியுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான மொஹமட் தஸ்லின், தற்போது விசேட தேவையுடைய நிலையில் உள்ளார்.இந்த நிலையில், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவினால் இந்த வெகுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை