ரூ.25 லட்சம் மதிப்புள்ள உணவின் மீது இருமிய பெண்ணுக்கு நேர்ந்த கதி... இது தேவையா?
பென்சில்வேனியாவில் உள்ள ஒரு பெண், கோவிட் -19 வழிகாட்டுதல்களைக் கடைபிடிக்க மறுத்த காரணத்திற்காக கடினமான தண்டனையை அனுபவித்து வருகிறார்.
NBC செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி,
கோவிட் எதிர்ப்பாளர்களில் ஒருவரான அந்தப் பெண், ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து வேண்டுமென்றே உணவின் மீது இருமியுள்ளார்.
மேலும் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும் கூறி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த பெண் இருமிய உணவு $ 35,000 (ரூ. 25 லட்சம்) அமெரிக்க டாலர்கள் மதிப்புடையது.
இந்த சம்பவம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்தது என்றும் கூறப்படுகிறது. அதிர்ச்சியூட்டும் அந்த சம்பவத்தில், மார்கரெட் ஆன் சிர்கோ என்று அழைக்கப்படும் அந்த பெண் பென்சில்வேனியாவில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வைக்கப்பட்டிருந்த உணவின் மீது இருமியது மட்டுமல்லாமல் அதில் துப்பவும் செய்தார்.
கடையில் உள்ள உணவுப் பொருட்களை மாசுபடுத்தியதோடு, சிர்கோ தான் வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், சூப்பர் மார்க்கெட்டில் இருப்பவர்கள் நோய்வாய்ப்படப் போவதாகவும் கத்தியுள்ளார்.
இறுதியாக அந்த பெண் போலீஸ்காரர்களால் கடையிலிருந்து வெளியேற்றப்பட்டார். கைது செய்யப்பட்ட பிறகு, 37 வயதான அந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்று பரிசோதிக்கப்பட்டது. சோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்பதும் உறுதியானது.
அவரிடம் விசாரணை நடத்தியதில், சம்பவத்தின் போது தான் குடிபோதையில் இருந்ததாக கூறி போலீசாரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
அவரது மன்னிப்பு என்னவோ ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் அவரால் இரண்டு வருட சிறைத்தண்டனையிலிருந்து மட்டும் தப்பிக்க முடியவில்லை.
அதைத் தொடர்ந்து விடுதலைக்கு பின்னர் 8 ஆண்டுகள் தகுதிகாண் லிஸ்டில் இருப்பார் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதவிர அந்தப் பெண் சூப்பர் மார்க்கெட்டுக்கு $ 30,000 அமெரிக்க டாலர்களை அபராதமாக செலுத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை