வல்வைப் படுகொலையின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு
வல்வைப் படுகொலையின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல் வல்வெட்டித்துறையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் அலுவலகத்தில் நேற்றையதினம் (02) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
வல்வையில் வைத்து 1989ஆம் ஆண்டு இதே நாளில் இந்திய இராணுவத்தினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட 63 பொது மக்களையும் நினைவு கூரப்பட்டது.
அமைதியை நிலை நாட்டுகிறோம் என வந்த பிராந்திய நலன் கொண்ட இந்திய அமைதிப்படை. ஈழ தேசத்தில் தன் முகமூடியை அப்பட்டமாக கழட்டி எறிந்த மேலும் ஒருநாள் வல்வைப்படுகொலை நாள் ஆகும்.
கருத்துகள் இல்லை